ரூ.60 கோடிக்கு சூப்பர் பங்களாவை விலைக்கு வாங்கிய நட்சத்திரம் தம்பதிகள்!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தமிழில் ’மின்சார கனவு’ ’வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் கஜோல். இவரது கணவர் அஜய் தேவ்கான் பிரபல பாலிவுட் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜய்தேவ்கான்-கஜோல் தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூபாய் 60 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை மும்பையின் முக்கிய பகுதியான ஜூஹுவில் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல பணக்காரர் புஷ்பா வலியா என்பவருக்கு சொந்தமான இந்த பங்களா 70 கோடி மதிப்புடையது என்றாலும் கொரோனா காலம் என்பதால் ரூ.60 கோடி ரூபாய்க்கு விலைக்கு வந்ததை அடுத்து அஜய் அஜய் தேவ்கான் இந்த பங்களாவை வாங்கி உள்ளாராம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த பங்களா இவரது கைவசம் வந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் வசித்து வரும் ஜூஹூ பகுதியில் அஜய் தேவ்கான் ஒரு சொகுசு பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் தற்போது அதே பகுதியில் இரண்டாவது பங்களாவை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமிதாப்பச்சன், சன்னி லியோன் உட்பட ஒருசில பிரபலங்கள் அபார்ட்மெண்ட் வீடுகளை வாங்கி குவித்த நிலையில் தற்போது அந்த வரிசையில் அஜய் தேவ்கான் பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
 

More News

'மாஸ்டர்' நடிகரின் மாஸ் பஞ்ச்: இன்ஸ்டாவில் வைரல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில் ஓடிடியிலும்

மகனின் புகைப்படத்தோடு மாஸ் பெயரையும் அறிவித்த ரமேஷ் திலக்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ரமேஷ் திலக் என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ரமேஷ் திலக், அதன்பிறகு 'நேரம்

தளபதி 65' நாயகியின் ஹாட் போட்டோஷூட்: வைரல் வீடியோ!

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷுடன் நடித்த நடிகை இவர்: யாரென தெரிகிறதா?

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மகன், மருமகள் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையில் 'முந்தானை முடிச்சு' நடிகை!

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது மகன், மருமகள், பேரனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக சமீபத்தில்