திரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் இந்திய சீன எல்லையான ‘கால்வான்’ பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் உயிரிழப்புக்கள் அதிகம் என்று கூறப்பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை
இந்த நிலையில் கால்வாய் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து எந்த பொருளும் இனி இறக்குமதி செய்யப் போவதுமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது இதனால் இந்திய சீனா இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ‘கால்வான்’ பள்ளத்தாக்கு சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே ஒருசில செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ‘கால்வான்’ பள்ளத்தாக்கு குறித்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் இந்திய சீன ராணுவ வீரர்களின் மோதல் காட்சிகள், 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் ஆகியவை முக்கியத்துவமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கான் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே ‘கால்வான்’ பள்ளத்தாக்கு மோதல் சம்பந்தமான படத்தில் நடிக்க அக்சய்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அஜய் தேவ்கான் இந்த படத்தை தயாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
IT'S OFFICIAL... #AjayDevgn to make film on #GalwanValley clash... The film - not titled yet - will narrate the story of sacrifice of 20 #Indian army men, who fought the #Chinese army... Cast not finalized... Ajay Devgn FFilms and Select Media Holdings LLP will produce the film. pic.twitter.com/yaM6rPcK7Z
— taran adarsh (@taran_adarsh) July 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments