'சிங்கம்' பட நடிகரின் சகோதரர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ’சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக் 2011 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியானது. சூர்யா கேரக்டரில் அஜய்தேவ்கான் நடித்து இருந்தார் என்பதும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சிங்கம்’ பட நாயகன் அஜய்தேவ்கான் சகோதரர் அனில் தேவ்கான் நேற்று இரவு எதிர்பாராத நிலையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து அஜய் தேவ்கான் தனது டுவிட்டரில் குறிப்பிடும் போது ’எங்கள் அன்புக்குரிய சகோதரர் அனில் தேவ்கான் நேற்றிரவு காலமானதை அறிந்து மனமுடைந்து உள்ளோம்.அவரை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரார்த்தனை நிகழ்ச்சியை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். அஜய்தேவ்கானின் சகோதரர் அனில்தேவ்கான் மறைவையொட்டி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I lost my brother Anil Devgan last night. His untimely demise has left our family heartbroken. ADFF & I will miss his presence dearly. Pray for his soul. Due to the pandemic, we will not have a personal prayer meet?? pic.twitter.com/9tti0GX25S
— Ajay Devgn (@ajaydevgn) October 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com