close
Choose your channels

சென்னை ஸ்டார் ஹோட்டலில் அஜித்-ஷாலினி கொண்டாட்டம்.. ஒரு வாரத்தில் இன்னொரு விசேஷம் இருக்குது..!

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அஜித் - ஷாலினி தங்களது 24 வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் மற்றும், நடிகை ஷாலினி ஆகிய இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்றுடன் அவர்களுக்கு திருமணமாகி 24 வருடங்கள் ஆனதை அடுத்து அந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை லீலா பேலஸ் என்ற ஸ்டார் ஓட்டலில் அஜித் மற்றும் ஷாலினி திருமண நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அங்கிருந்த ரசிகர்கள் வாழ்த்து கூறிய போது அவர்களுடன் இணைந்து அஜித் மற்றும் ஷாலினி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் கோட் சூட்டில் ஷாலினி சுடிதாரிலும் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் அதாவது மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து இன்னொரு கொண்டாட்டம் இருக்கிறது என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் முடிந்தவுடன் அவர் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment