மீண்டும் கள்ளாட்டம், மோசமான யுக்தி: திருந்தாத ஐஸ்வர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஐஸ்வர்யா இதுவரை பெரும்பாலான டாஸ்க்குகளில் ஒன்று கள்ளாட்டம் அல்லது அழுகுனி ஆட்டம் ஆடி வருவதால் பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்துள்ளார். டாஸ்க்கை ஒரு விளையாட்டாக பார்க்காமல் அதிலும் வஞ்சம் வைத்து விளையாடும் போக்கை அவர் மாற்றி கொள்ளவும் இல்லை, அவரை வெளியேற்ற பிக்பாஸ் விரும்புவதும் இல்லை.
இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதில் விஜயலட்சுமி அசந்த நேரம் அவரை கீழே தள்ளிவிடும் ஐஸ்வர்யா, அனைவரும் விஜியை தூக்க முயற்சிக்கும்போது நைஸாக கள்ளாட்டம் ஆடுகிறார். இதனை ஜனனி கண்டுபிடித்து தட்டிக்கேட்க, வழக்கம்போல் ஐஸ்வர்யா, கோபத்துடன் புலம்ப தொடங்குகிறார்.
கிட்டத்தட்ட மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா இதே ரீதியில் சென்றால் உண்மையாகவே மனநிலையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யாவை குறைகூறுவதைவிட இதற்கு முழு பொறுப்பு இத்தனை வாரங்கள் டி.ஆர்.பிக்காக வெளியேற்றாமல் வைத்திருக்கும் பிக்பாஸ் தான் ஏற்க வேண்டும்.
#பிக்பாஸ் இல்லத்தில் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/O6KCceF7Tw
— Vijay Television (@vijaytelevision) September 20, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments