ஐஸ்வர்யாவை டார்ச்சர் செய்யும் விஜி! வேடிக்கை பார்க்கும் யாஷிகா

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் அவர்களுடைய மன உறுதியை சோதனை செய்யும் டாஸ்க்காக அமைந்துள்ளது. ஒரு போட்டியாளரை மற்றவர்கள் டார்ச்சர் செய்து அவரை பஸ்ஸரில் இருந்து கையை எடுக்க செய்ய வேண்டும் என்பதே இன்றைய டாஸ்க். இந்த டாஸ்க்கில் வழக்கம்போல் முன்பகையை தீர்த்து கொள்ளவும், நெருங்கிய தோழியை காப்பாற்றவும் போட்டியாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.

நேற்றைய யாஷிகாவின் டாஸ்க்கின்போது தனது டீமுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தனது தோழியை காப்பாற்றுவதிலேயே ஐஸ்வர்யா குறியாக இருந்தார். இதனால விஜி உள்பட மற்றவர்கள் டென்ஷன் ஆனதையும் கருத்தில் கொள்ளாமல் ஐஸ்வர்யா தனது போக்கில் விளையாடியது போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலாக்கியது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கில் விஜி அவருக்கு அதிகபட்ச டார்ச்சர் கொடுத்து வருகிறார். விதவிதமான யோசிக்கும் விஜியின் டார்ச்சரை தாங்கமுடியாமல் ஐஸ்வர்யா நெளிய, தனது டாஸ்க்கின்போது காப்பாற்றிய ஐஸ்வர்யாவை, பதிலுக்கு காப்பாற்ற முடியாமல் வேறு வழியின்றி யாஷிகா வேடிக்கை பார்க்கின்றார். அடுத்ததாக ரித்விகா டாஸ்க்கின்போது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் அவரை வச்சு செய்ய வாய்ப்பு உள்ளது.

 

More News

இரண்டாம் பாகமாக உருவாகும் பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படம்

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய சூப்பர் ஹிட் த்ரில் படமான 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்

செக்க சிவந்த வானம்: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்த 'செக்க சிவந்த வானம்'

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அஜித்-விஜய் நாயகி

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளிவரும் என்ற வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜூ காலமானார்.

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 68. சிவாஜிகணேசன், சத்யராஜ் நடித்த 'ஜல்லிக்கட்டு',