ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகளிர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது என்பதையும், திரை உலக பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த மகளிர் தினத்தை எனக்கு கொரோனா வைரஸ் பாதித்த போதும், அதன்பின் உடல்நலமின்றி இருந்தபோதும் என்னை அன்பாக கவனித்துக் கொண்ட அழகிய செவிலியர்கள் உடன் கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
’ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் அமைதியும் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் பெண்களை நேசியுங்கள், அப்படி நேசித்தால் வாழ்க்கை உங்களை நேசிக்கும்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout