'ஹேப்பி பர்த்டே மை டார்லி'ங்: ஐஸ்வர்யா ரஜினியின் வாழ்த்து யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’ஹேப்பி பர்த்டே மை டார்லிங்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகின்றது .
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினியின் மகன் வேத் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி வேத் பிறந்த நிலையில் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை டார்லிங்! பெரியம்மாவின் அன்பு உனக்கு எப்போதும் உண்டு. கடவுள் உனக்கு எல்லா வளமும் மகிழ்ச்சியும் கொடுக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.
இதே பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த், வேத், கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு, ஹேப்பி பர்த்டே வேத் குட்டிம்மா’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout