சரியான ஜோடி.. மணமக்களை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சிறப்பாக நடந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'சரியான பொருத்தமான ஜோடி’ என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அதில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய புகைப்படம் வைரலாகி வருகிறது
நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் திருமண ஜோடிகள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சரியான திருமணம்
சரியான பொருத்தம்
சரியான புன்னகையுடன் கூடிய அணைப்பு
நீங்கள் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருக்கும்போது மணமகன் மற்றும் மணமகள் மகிழ்ச்சியை பார்ப்பதே ஒரு தனி மகிழ்ச்சி! எனது அன்பான கௌதம்ராம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாமோகன் இவ்வளவு எளிமையாகவும் முதிர்ச்சியோடும் தொடங்கியிருக்கும் இந்த அழகான பயணத்தின் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Perfect wedding,match
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 28, 2022
smiles n hugs !When you are @ a wedding where you are there as the bride’s n the groom’s side is joy!Wishing @gauthamramkarthik @manjimamohan happiness thru this beautiful journey they have begun with such simplicity maturity n class #friendslikefamily❤️ pic.twitter.com/rKII7EseFw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments