அப்பா பிறந்த நாளில் மகள் கொடுத்த சர்ப்ரைஸ்: 'லால் சலாம்' சூப்பர் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’லால் சலாம்’ என்ற படத்தின் சூப்பர் போஸ்டர் ஒன்றை அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘லால்சலாம்’ படத்தில் உள்ள ரஜினியின் கெட்டப் இந்த போஸ்டரில் வித்தியாசமாக இருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்கள் அதனை ரசித்து வருகின்றனர்.
இந்த பதிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியபோது, ‘உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நீங்கள் தினமும் கோடிக்கணக்கானவர்களை சந்தோஷப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர். சூப்பர் ஸ்டாரான என் அப்பாவும் எங்கள் ஒரே தலைவருமான நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என இதயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால்சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில் ராமு தங்கராஜ் கலை இயக்கத்தில் பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பில் உருவாகும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No amount of praise is enough for you ..
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2022
You make millions happy everyday..
You are to be celebrated every single day..
But today wishing you THE SUPER STAR ⭐️ MY APPA and OUR ONE AND ONLY THALAIVA the happiest healthiest and the most heartfelt HAPPY BIRTHDAY #rajiniday pic.twitter.com/gk6A0eqsKx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments