4 மொழிகளில் ஐஸ்வர்யா ரஜினியின் ஆல்பம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார் என்பதும் ’முசாபார்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது என்றும் செய்திகள் வெளியானதை செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த மியூசிக் ஆல்பத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் தற்போது இந்த மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் எட்டாம் தேதியை யூடியூப் சேனலில் இந்த மியூசிக் ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித், தெலுங்கில் சாகர் மற்றும் ஹிந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் இந்த மியூசிக் ஆல்பத்தை பாடியுள்ளனர். அங்கித் திவாரி இசையமைப்பில் உருவாகிய இந்த மியூசிக் ஆல்பத்தை ’பே பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மியூசிக் ஆல்பத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படம் ஒன்றை இயக்க போவதாகவும் கூறப்படுகிறது.
#Musafir directed by @ash_r_dhanush will be out on March 8, on @tipsofficial's YouTube channel.
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 3, 2022
Singers @officiallyAnkit (Hindi) @anirudhofficial (Tamil) @ranjithkg (Malayam) @sagar_singer (Telugu)
Produced by: @bayfilms_llp@shivin7 and @AlwaysJani pic.twitter.com/CitnyzFMiH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com