இன்று முதல் அந்த ஃபேமிலியில் சேர்ந்துவிட்டேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,April 22 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று முதல் அந்த குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடலை பிட்டாக வைத்திருப்பதில் வல்லவர் என்பதும் தினசரி அவர் ஜிம் சென்று உடற் பயிற்சிகள் செய்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது உலகின் மிகச்சிறந்த பிட்னஸ் நிறுவனத்தின் ஃபேமிலியில் தான் இணைந்துள்ளதாகவும், இதனை அடுத்து தனக்கு இன்னும் அதிக ஆச்சரியமான அனுபவங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கிய நிலையில் அந்த ஆல்பத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். 'ஓ சாதிசால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

More News

கவின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'பீஸ்ட்' நடிகை: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் கவின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பரத்தின் 50வது படத்திற்கு உதவி செய்த மோகன்லால்!

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதன்பின் காதல், எம் மகன், வெயில், பழனி, நேபாளி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில்

என்னை மீறி எதுவும் நடக்காது: அசோக்செல்வனின் 'ஹாஸ்டல்' டிரைலர்

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த 'ஹாஸ்டல்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மன்மதலீலை, ஓ மை டாக்: இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்!

திரை அரங்குகளுக்கு இணையாக ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதையும் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

சமந்தாவின் அடுத்த பட பூஜை: ஹீரோ யார் தெரியுமா?

நடிகை சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் 'யசோதா' மற்றும் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.