மகன்களுடன் 'லால்சலாம்' படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. படக்குழுவினர்களுக்கு வைத்த விருந்து..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தனது மகன்களை அழைத்து வந்துள்ளார். மேலும் படக்குழுவினர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் மேலும் இந்த படத்தில் ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில், உட்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை ‘லால் சலாம்’ படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் இந்த விழாவுக்கு தனது மகன்களையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழைத்து வந்திருந்தார். மேலும் அவர் தனது படக்குழுவினர்களுக்கு விருந்து வைத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.