ஐஸ்வர்யா ரஜினிக்கு கிடைத்த அன்பான முத்தங்கள்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அவரது இரண்டு மகன்கள் கொடுக்கும் அன்பான முத்தம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வருகின்றன.
ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிக்கு லிங்கா, யாத்ரா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்தாலும் தனது இரு மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் நேற்று உலக கவிதை நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் குறித்த அழகிய கவிதையை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது இரண்டு மகன்களும் தனக்கு அன்பான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள கவிதையில் கூறப்பட்டுள்ளதாவது:
என் வயிற்றில் இருக்கும் போது என்னை உதைத்தாய்...
இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து
என்னை முத்தமிடுவதை நான் ரசிக்கிறேன்
அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு
கடவுளுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்
உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை மட்டுமே
உங்கள் ஒவ்வொரு வளர்ச்சியையும் பொக்கிஷமாக பார்ப்பேன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com