மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: க்யூட் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மெழுகுவத்தி ஏற்றி அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.