close
Choose your channels

விஷ்ணு விஷால் பிறந்த தினத்தில் தான் இதுவும் நடந்தது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறப்பு பதிவு..!

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு கேக் வெட்டி கொண்டாடினார்.

இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’18 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்த பின்னர் இரண்டு கேக்கள் நாங்கள் வாங்கினோம். ஒன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை கொண்டாட, இன்னொன்று ’லால் சலாம்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் முடிவடைந்ததற்கு’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் நள்ளிரவு 2 மணிக்கு இந்த இரண்டு விழாவையும் நாங்கள் கொண்டாடினோம். எங்கள் பர்த்டே பேபி விஷ்ணு விஷாலுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதே சமயம் இரண்டு மணிக்கு வரை விழித்திருந்து எங்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment