நண்பர் என கூறிய தனுஷுக்கு ஐஸ்வர்யா கூறிய பதில்!
- IndiaGlitz, [Friday,March 18 2022]
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நண்பர் என கூறிய தனுஷுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் 18 ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போவதாக அறிவித்தனர். இருப்பினும் இன்னும் சட்ட ரீதியாக பிரிவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுவதால் இரு தரப்பு பெரியவர்களும் தனுஷ் - ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ மியூசிக் ஆல்பம் நேற்று வெளியான நிலையில் இந்த மியூசிக் ஆல்பத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்த தனுஷ் எனது நண்பர் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த மியூசிக் ஆல்பம் வெற்றி பெற கடவுள் அருள் புரிவார் என்றும் பதிவு செய்திருந்தார்
இதற்கு பதில் அளித்துள்ள ஐஸ்வர்யா, ‘நன்றி தனுஷ்’ என குறிப்பிட்டு Godspeed என பதிவு செய்துள்ளார்.
Thank you Dhanush….Godspeed https://t.co/XyP9lmnX3P
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 17, 2022