மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கோபமான பதிவு.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கோபமான ஆவேசமான ஒரு பதிவு செய்துள்ளார்.
அவர் தனது பதிவில் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளோடு புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து குறிப்பிட்டு அனைத்து பெண்களும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும், இனி எந்த ஒரு பெண்ணுக்கும் எந்த ஒரு பெண் குழந்தைக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் மனித ரூபத்தில் உலாவும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி இனிமேல் சின்னாபின்னமாக கூடாது என்று கோபத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும் இது போன்ற கேடுகெட்ட மனிதர்களை கடவுள் தண்டிப்பார், ஒருவேளை அனைத்து சட்டம் மற்றும் கடவுள் அவர்களுக்கான தண்டனை கிடைக்காத பட்சத்தில் அந்த பெண் குழந்தைக்காக நம்முடைய கண்ணீர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதுவையில் பலியான பெண் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய அவர் பிரார்த்தனை செய்வதாகவும் இந்த விஷயத்தை கேட்டபோது தன்னுடைய இதயம் நடுங்கிதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
All I wish to say to all the strong bold emotionally powerful WOMEN out there..I plead to you to put out your strongest prayer with me TODAY #InternationalWomensDay (more than ever) to the ultimate #shiva that NEVER again should a girl (child lady or woman) go through misery and…
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments