சற்றுமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்து வருவது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே வர வேண்டுமென்றால் டபுள் மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம், நாட்டையும் காப்போம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Words of wisdom from Actress @aishu_dil who appeals to one and all to stay indoors during this pandemic!#COVIDSecondWave #COVID19chennai #COVID19 pic.twitter.com/LE71TF2EKE
— RIAZ K AHMED (@RIAZtheboss) May 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments