இவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா? விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கியது என்பதும் நேற்று மாலை நடந்த அவரது இறுதி சடங்கிற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விவேக்கின் நினைவலைகளை அவருடன் நடித்த நடிகர்களும் பழகிய நட்சத்திரங்களும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் விவேக் தன்னை பாராட்டிய பழைய டுவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் ஒன்றை விவேக் பதிவு செய்து ’இவர் தான் காக்கா முட்டை படத்தில் நடித்தவரா? என்ற ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி ‘என்ன ஒரு மாற்றம்? அழகு மற்றும் திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந்த ஒரு நடிகை’ என்று பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
#viveksir ?? pic.twitter.com/e9irqWF1U4
— aishwarya rajesh (@aishu_dil) April 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com