'சாமி 2' படத்தில் திடீர் திருப்பம்: த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,July 04 2018]

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'சாமி' படத்தில் நடித்த த்ரிஷா, இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக் அறிவிக்கப்பட்டது. ஆனால் த்ரிஷா இந்த படத்தில் இருந்து திடீரென விலகினார்.

இந்த நிலையில் த்ரிஷா நடிக்கவிருந்த கேரக்டருக்கு தற்போது பிரபல ந்டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்த ஸ்டில்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.

விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, ஜான்விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரியன் வெங்கடேஷ் ஒளிப்பதிவும், விடி விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாரா படத்திற்கு புரமோஷன் செய்த விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

'யோகன் அத்தியாயம் ஒன்று' டிராப் ஆனது ஏன்? மனம் திறந்த கவுதம்மேனன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 'யோகன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

'விஸ்வரூபம்' பாடலை பாடிய கூலித்தொழிலாளிக்கு கமல் கொடுத்த கெளரவம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாத நான்' என்ற பாடலை

இந்தியாவில் இதுதான் முதல்முறை: சிவகார்த்திகேயன் படம் குறித்த புதிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில்

சச்சினையும் தமிழராக மாற்றிய ஹர்பஜன்சிங்

பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்தே தனது டுவிட்டரில் தமிழில் டுவீட் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்