தனுஷ் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டு உடைத்த ரகசியம்!

தனுஷ் நடித்த ஹிட் படத்தின் ரகசியத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’வடசென்னை’. இந்த படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த நிலையில் அவர் இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். இந்த படத்திற்காக தான் ஆடிசன் சென்றபோது இயக்குனர் வெற்றிமாறன், ‘உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை பேசி காட்டுங்கள்’ என்று கேட்டார். நான் பேசிய கெட்ட வார்த்தையை கேட்டதும் உடனே ’நீ தான் இந்த படத்தின் ஹீரோயின்’ என்றார். ’உலகத்திலேயே கெட்ட வார்த்தை பேசி ஒரு படத்தின் நாயகியாக தேர்வு பெற்றது நானாகத்தான் இருப்பேன்’ என்று ’வடசென்னை’ படத்தில் ஹீரோயினாக செலக்ட் ஆன ரகசியத்தை அந்த பேட்டியில் போட்டு உடைத்துள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ‘டிரைவர் ஜமுனா’, ’மோகன்தாஸ்’ ’தீயவர் குலைகள் நடுங்க’, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.