யாரை நம்புவது என்றே தெரியவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷின் அதிர்ச்சி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு துரோகம் செய்வதாகவும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்றும் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ’அட்டகத்தி’ என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பின்னர் ’காக்கா முட்டை’ ’மனிதன்’ ‘திருடன் போலிஸ்’ ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பதும் ’கனா’ திரைப்படத்தின் மூலம் அவர் தென்னிந்திய அளவில் பிரபலம் ஆனார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’தன்னிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த, நம்பிக்கைக்கு உரிய உதவியாளர் ஒருவர் தனக்கு எதிராக வேலை செய்ததாகவும், ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு என்னைப்பற்றி அப்டேட்களை கொடுத்ததாகவும், என்னைப் ஃபர்சனல் விவரங்களை கூறுவது போன்றவற்றை செய்து உள்ளார் என்றும், மிகவும் நம்பிக்கையான அவரே இதுமாதிரி செய்தது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள் என்றாலும் தப்பு நடந்து விட்டது இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன் என்றும், என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றும் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரே இப்படி செய்வதால் யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை’ என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com