பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்திற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் அதிகம் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக மிகப் பெரிய புகழை பெற்றார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘டிரைவர் ஜமுனா’ என்பதுதான் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் என்பதும் இந்த படத்தை கின்ஸ்லின் என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’வத்திக்குச்சி’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடிக்கவுள்ளார் என்றும், இன்றைய காலகட்டத்தில் நடுத்தர குடும்பத்து பெண் ஒருவர் கால் டாக்சி டிரைவராக பணி செய்யும் போது ஏற்படும் அனுபவங்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் கின்ஸ்லின் தெரிவித்துள்ளார்.
@aishu_dil's next film has been titled as #DriverJamuna, Directed by #Vathikuchi fame @kinslin Bankrolled by @SPChowdhary3 of #18Reels. #HBDAishwaryaRajesh @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/LxdINHUGoD
— Ghibran (@GhibranOfficial) January 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com