ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளான் பி' இதுதான்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த சில மணி நேரத்துக்கு முன்பாக பார்த்தோம். கடந்த சில நாட்களாக ‘பிளான் பி’ என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’திட்டம் இரண்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில் சதீஷ் ரகுநாதன் இசையில் பிரேம் குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ மற்றும் சிக்சர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கி, லென்ஸ், மொபைல்போன், வாக்கிடாக்கி, கைரேகை போன்றவை இருப்பதால் இந்த படம் திகில், சஸ்பென்ஸ் கொண்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர்கள் படுகாயம்

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில்

மது அருந்திவிட்டு வந்த கணவர், மகளுடன் தீக்குளித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது.

கோயம்பேடால் குவிந்த கொரோனா நோயாளிகள்: இன்று 580 பேர்களுக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு மேல் இருந்து வரும் நிலையில் இன்றும் ஐநூறுக்கும் மேல் அதாவது 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக

மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்குமா? நடிகை ரகுல் ப்ரித்திசிங் கேள்வி

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு டாஸ்மார்க் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.

என்று தணியும் கொரோனா!!! எப்போது முடிவுக்கு வரும்??? தொடரும் கேள்விகளுக்கு விளக்கம்!!!

ஒரு பெருந்தொற்றை எப்படி அளக்கலாம் என்பதைப் பற்றிய கணக்கீட்டு வடிவத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் உருவாக்கினார்.