close
Choose your channels

அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்..!

Monday, February 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வெளியான ’டிரைவர் ஜமுனா’ என்ற திரைப்படம், அதன் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ அதற்கு அடுத்த வாரமே வெளியான ’ரன் பேபி ரன்’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டும் இன்றி வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ’சொப்பன சுந்தரி’ என்ற திரைப்படம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ‘மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ ’இடம் பொருள் ஏவல்’ ’ஃபர்ஹானா’ ’துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களும் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ல்ஸ் கேர்ள் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment