ஊரடங்கு நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விஜய்சேதுபதி செய்யும் உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ரம்மி’ மற்றும் ’தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மேலும் இருவரும் இணைந்து நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிடவுள்ளார். ஊரடங்கு நேரத்தில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷனுக்கு விஜய்சேதுபதி உதவி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் என்பவர் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ‘கனா’ போல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே தமிழில் ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What is Plan B? - @aishu_dil 's next First Look will be revealed by Actor @VijaySethuOffl Today at 6PM! Stay Tuned.#PlanB #WhatIsPlanB@MiniStudio_ @Vinod_Offl @SixerEnt @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @divomovies @digitallynow @proyuvraaj pic.twitter.com/EwhJXYcgJd
— Mini Studio (@MiniStudio_) May 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com