ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்களில் ஒன்றின் ரிலிஸ் தேதி தள்ளிவைப்பு!

  • IndiaGlitz, [Saturday,December 24 2022]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மற்றும் 'டிரைவர் ஜமுனா’ ஆகிய 2 திரைப்படங்கள் டிசம்பர் 29, டிசம்பர் 30 ஆகிய அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படம் இதே பெயரில் வெளியான மலையாளப் படத்தின் ரீமேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மற்றும் ’டிரைவர் ஜமுனா’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என இரு படங்களின் தயாரிப்பாளர்கள் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 29க்கு பதிலாக விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் ’டிரைவர் ஜமுனா’ என்ற திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.