close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கு கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்: யாருடன் தெரியுமா?

Friday, May 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து முன்னணி நடிகர்கள் நடிகைகள் டெக்னீஷியன்கள் உள்பட அனைவரும் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

இந்த ஓய்வு நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன்னர் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘ஓகே கண்மணி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மெண்டல் மனதில்’ என்ற பாடலுக்கு தன்னுடைய மருமகனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சி விளையாடிய ஜாலியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த க்யூட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ’பூமிகா’ ’திட்டம் 2’ ’டிரைவர் ஜமுனா’ ’மோகன்தாஸ்’ ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய தமிழ் படங்களிலும் ’ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் ’ரிபப்ளிக்’ ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment