விஜய்சேதுபதியுடன் 5வது முறையாக இணையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,June 02 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன், சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. மேலும் அவரது நடிப்பில் 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'சயிர நரசிம்மரெட்டி', 'உள்பட ஒருசில படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன், 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' 'தர்மதுரை' மற்றும் இன்னும் வெளிவராத 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் 5வது முறையாக அவருடன் ஜோடி சேருகிறார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

'காஞ்சனா' இந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு

காஞ்சனா தமிழ் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான 'லட்சுமிபாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இறுதி நாள் படப்பிடிப்பு: விக்ரமுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

கடும் வெயில்: 50 காவல்துறையினர்களுக்கு கூலிங் கிளாஸ் கொடுத்த தமிழ் நடிகர்

கடுமையான வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினர்கள் சுமார் 50 பேர்களுக்கு நடிகர் ஜெய்வந்த் கூலிங் கிளாஸ் வாங்கி கொடுத்துள்ளார். 

பா.ரஞ்சித் படத்திற்காக டப்பிங் பேசிய ரித்விகா!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா, பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.