சிவகார்த்திகேயன் 16' படத்தில் இணைந்த இரண்டாவது நாயகி!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் எஸ்கே 16' திரைப்படத்தின் ஒரு நாயகி அனு இமானுவேல் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை தற்போது இணைந்துள்ளார். அவர்தான் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு திரைப்படமான 'கனா' படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

'எஸ்கே 16' திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகளான அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்திருப்பதும், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இமான் இணைந்திருப்பதும், சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ் மீண்டும் அவரை இயக்குவதாலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது மேலும் ஒரு பிளஸ் ஆக கருதப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 'எஸ்கே 16' படத்தின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படத்தின் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றது. இன்னும் என்னென்ன ஆச்சரிய செய்திகள் வெளிவரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.