விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி நடிகை!

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பதும் இவற்றில் காடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது விஷ்ணுவிஷாலின் ‘மோகன்தாஸ்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தில் ஏற்கனவே நடிகை ஷரவந்தி சாய்நாத் என்பவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

போனிகபூரின் மாஸ் 'வலிமை' அப்டேட்: ஸ்தம்பிக்கும் சமூக ஊடகங்கள்!

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 'வலிமை' படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளின் மகள் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

பிப்ரவரி 14, நமக்கு மட்டும் இப்படியா? பிக்பாஸ் பாலாஜி புலம்பல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்

அதை நினைத்தால் எனக்கு தூக்கமே வராது: காஜல் அகர்வாலின் திகில் அனுபவம்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'லைவ் டெலிகாஸ்ட்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்த அனுபவம்

அதிமுக தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, ஒரு குடும்பம் ஆள்வதற்கு தலை வணங்காது- முதல்வர் அதிரடி பேச்சு!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பொதுமக்கள் இடையே பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,