விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பதும் இவற்றில் காடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது விஷ்ணுவிஷாலின் ‘மோகன்தாஸ்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தில் ஏற்கனவே நடிகை ஷரவந்தி சாய்நாத் என்பவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The happening @aishu_dil joins the team of #Mohandas ?? @TheVishnuVishal @VVStudioz @im_the_TWIST @24frps @SundaramurthyKS @shravanthis111 @proyuvraaj pic.twitter.com/l97mNhEJqt
— Diamond Babu (@idiamondbabu) February 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments