'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா': 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,October 25 2022]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தீபாவளி தினத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும் கனவுகளுடன் ஒரு வீட்டுக்கு மருமகளாக செல்லும் ஒரு பெண் தனது ஆசை, கனவுகள் ஆகியவற்றை முடக்கி விட்டு வெறும் அடுப்பங்கரையில் மட்டுமே வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. கணவர், மாமனார் இருவரும் அதிகார தோரணையில் கட்டளையிடுகின்றனர். அதனை அவர் எப்படி சமாளித்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் மலையாளத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்த கேரக்டரில் தான் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கிறார். இவர் பாடகி சின்மயி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


More News

தாத்தாவுடன் தீபாவளி கொண்டாட்டம்: ரஜினி பேரன்களின் மாஸ் புகைப்படங்கள்!

 இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தீபாவளி வாழ்த்துக்களை

'தேவர் மகன்' போஸில் கமல்ஹாசன்: அக்சராஹாசன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவர் அருகில் கமல்ஹாசன்

கணவர் மற்றும் மகள்களுடன் நதியா.. என்ன அழகான குடும்பம்!

தமிழ் திரை உலகில் கடந்த 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நதியா என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களுடன் அவர் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் சாக்சி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டி விக்கி-நயன்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நட்சத்திர தம்பதிகள் இரட்டை குழந்தைகளின் வீடியோவை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.