'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா': 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தீபாவளி தினத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும் கனவுகளுடன் ஒரு வீட்டுக்கு மருமகளாக செல்லும் ஒரு பெண் தனது ஆசை, கனவுகள் ஆகியவற்றை முடக்கி விட்டு வெறும் அடுப்பங்கரையில் மட்டுமே வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. கணவர், மாமனார் இருவரும் அதிகார தோரணையில் கட்டளையிடுகின்றனர். அதனை அவர் எப்படி சமாளித்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் மலையாளத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்த கேரக்டரில் தான் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கிறார். இவர் பாடகி சின்மயி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Here is the hard hitting trailer of my film, #TheGreatIndianKitchen ( Tamil ) Get set for a film that's bound to make you do some serious soul-searching!https://t.co/rymYiXFA21
— aishwarya rajesh (@aishu_dil) October 24, 2022
@Dir_kannan #DurgaramChoudhary #NeelChoudhary @RDCMediaPvtLtd @23_rahulr @balasubramaniem
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments