ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ள ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் படம் அதே டைட்டிலில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
புதிதாக திருமணமான பெண் புகுந்த வீட்டில் கடைபிடிக்கப்படும் பழமைவாத கொள்கைகள் மற்றும் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் படும் கஷ்டங்கள் அதன்பிறகு அவர் எடுக்கும் அதிரடி முடிவு ஆகியவை தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தை தமிழகத்தில் சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are elated to release the Tamilnadu Theatrical of Aishwarya Rajesh starring #TheGreatIndianKitchen ( Tamil ) Directed by R.Kannan
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 20, 2022
Grand Release on December 29 in theatres
Produced by Durgaram Choudhary, Neel Choudhary@RDCMediaPvtLtd @aishu_dil @23_rahulr pic.twitter.com/jZzEPIubcB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com