டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் 'சொப்பன சுந்தரி': ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’சொப்பன சுந்தரி’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நாளை முதல் அதாவது மே 12 முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நகைக்கடை நடத்திய அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வெல்லும் ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றி நடப்பது தான் இந்த படத்தின் கதை என்பதும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா, லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசாக வென்ற காரை அவர்கள் உரிமை கோருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சவால்கள், இந்த சிக்கல்களை இந்த 3 பெண்கள் எப்படி சமாளித்து காரை வென்றனர் என்பதை காமெடியாக இயக்குனர் காட்சி வடிவமைப்பில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மேலும் சந்திரமௌலி, கருணாகரன், மைம் கோபி, சதீஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
அஜ்மல் தஹ்சீன் இசையமைக்க, பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் எடிட்டிங் பணியை கே சரத் குமார் கவனித்துள்ளார்.
நகைச்சுவை மட்டுமின்றி சொப்பன சுந்தரி பெண்களை மையமாகக் கொண்ட ஒரு வலுவான செய்தியையும் கொண்டுள்ளது. அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் சிரமங்களையும் அவற்றை அவர்கள் எவ்வாறு சமாளிப்பது என்பதையும் இந்த படம் காட்டுகிறது.
Azhagana red colour car varudhu! 🚗 #SoppanaSundari Streaming from May 12 on #DisneyPlusHotstar pic.twitter.com/5cCgLfJWdX
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com