செம சீன்: ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் செம சீன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுற்றுலாவுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். ஏற்கனவே காஜல்அகர்வால் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் மாலத்தீவு சென்று வந்துள்ளனர் என்பதும் சமீபத்தில்கூட டிடி என்கிற திவ்யதர்ஷினி மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் தெரிந்ததே.

மாலத்தீவு சென்ற தமிழ் நடிகைகள் பட்டியலில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். மாலத்தீவு சென்று அங்கிருந்து சென்ற விமானத்தில் பறந்து கொண்டே மாலத்தீவின் அழகை ரசிக்கும் வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார் செம சீன் என்று அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

எனது விடுமுறைக்கு நான் மாலத்தீவைத் தேர்வுசெய்ததற்கு முக்கிய காரணம், ஒரு சீ-ப்ளேனில் சவாரி செய்வது! மாலத்தீவு ரிசார்ட் தீவுகளின் கடற்பரப்பில் இருந்து 30 நிமிடங்கள் பறந்து செம சீன்களை காண்பது என்பது மிகப்பெரிய சந்தோஷம்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.