close
Choose your channels

ஒவ்வொரு பறவைக்கும் பறக்க முடிஞ்ச உயரம்ன்னு ஒன்னு இருக்கு.. 'பர்ஹானா' டீசர்..!

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘பர்ஹானா’ என்ற திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படம் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன என்பதும் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த படத்தை வெளியிடக் கூடாது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு செல்லும் முடிவை எடுப்பது, இந்த முடிவு தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது என்பது அதன் பின் அவர் சந்தித்த பிரச்சனைகள், சிக்கல்கள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

நெல்சன் வெங்கடேஷ் என்பவரின் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளின் எதிர்ப்பை மீறி இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment