ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,October 24 2022]

தமிழ் திரையுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகைகளாக நயன்தாரா, த்ரிஷா உள்பட ஒரு சிலர் உள்ளனர். அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவர் நடித்த ’கனா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் படங்களில் ஒன்று ’டிரைவர் ஜமுனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை கிங்ஸ்லின் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’வத்திக்குச்சி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த படம் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் கிங்ஸ்லின் தனது டுவிட்டர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார் என்பதும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் டாக்சி ஓட்டும் போது திடீரென ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார் என்பதும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.