ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் 'சிஸ்டர்'.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.
Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குனர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” என பெயரிடப்பட்டுள்ளது.
திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், இயக்குனர் சாம் ஆண்டன், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர்.
கடந்த மாதம் துவங்கி, தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,
அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பெரும் பொருட்செலவில், அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com