கார்த்திக் சுப்புராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' டிரைலர்!

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’பூமிகா’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜின் முந்தைய ஓடிடி திரைப்படமான கீர்த்தி சுரேஷின் ‘பெங்குயின்’ திரைப்படத்தை ஞாபகப்படுத்தும் அளவுக்கு பல காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் வீட்டில் பேய் ஒன்று இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீர் திடீரென மர்மமான படுகொலைகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து விசாரணை செய்யும் பூமிகா என்ற கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்தாரா? என்பதுதான் கதை என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதும், சமீபத்தில் வெளியான ’திட்டம் இரண்டு’ போல் இந்த படமும் அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரதீந்திர பிரசாத் இயக்கத்தில் பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.