ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலில் ஏற்கும் வித்தியாசமான கதாபாத்திரம்!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்னர் ’பண்ணையாரும் பத்மினியும்’ ’காக்கா முட்டை’ ’மனிதன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திரையுலக வாழ்வில் ’கனா’ ஒரு முக்கிய படம் என்றால் அது மிகையாகாது

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’பூமிகா’. இந்த படத்தில் அவர் இது வரை ஏற்காத புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் டைட்டில் ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இயற்கையை சீரழிக்கும் மனிதர்களை இயற்கையே பழிவாங்குவது போன்ற கதையம்சம் கொண்ட என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மனித இனத்தையே கொரோனா வைரஸ் ஆட்டிவைப்பது போல் இயற்கை வெகுண்டு எழுந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராபர்ட் ஒளிப்பதிவில் பிரித்திவி சந்திரசேகர் இசையில் ஆனந்த் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.