ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அவசரமாக தேவைப்பட்ட ரெம்டெசிவிர் : உடனடியாக உதவிய உள்ளங்கள்!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட, அதனை அவர் டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை அடுத்து அவருக்கு உடனடியாக அந்த மருந்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் நன்றி தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தற்போது பெரும் கிராக்கி உள்ளது. அந்த மருந்து வாங்குவதற்காக மருத்துவமனைகளில் பலர் நீண்ட வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நண்பர் ஒருவரின் பெற்றோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு உதவும் வகையில் உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாகவும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு அவருடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

தயவுசெய்து தனது நண்பருக்கு உதவவும் என ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அவருக்கு பல ரசிகர்கள் உதவி செய்ய முன்வந்தனர். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மிகவும் நன்றி எங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைத்துவிட்டது, உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

More News

8 மாதக் கர்ப்பத்துடன் நீருக்கு அடியில் போட்டோ ஷுட் நடத்திய பிரபல நடிகை?

நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்’‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி.

எம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்தது. இதில் ராஜ்சபா எம்,பிக்களாக பதவி வகித்து வந்த பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் போட்டியிட்டனர்.

கணவர், குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு? விஜய் பட நாயகியின் உருக்கமான வீடியோ!

தளபதி விஜய் நடித்த சச்சின் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் நடிகை ஜெனிலியா டிசோசோ. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா

ஒரு மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா? அப்போ நோயாளிகள்?

டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 80 மருத்துவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் தாயையும் சகோதரியையும் இழந்துவிட்டேன்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பலியாகி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.