டெல்லி ஐகோர்ட்டில் ஐஸ்வர்யாராய் மகள் போட்ட வழக்கு: கண்டித்த நீதிமன்றம்..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆராத்யாவுக்கு தற்போது 12 வயதாகும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து ஒரு சில யூடியூப் சேனல்களில் அவதூறு செய்திகளை பரப்பி வரப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது உடல்நிலை குறித்து தவறான நோக்கத்துடன் வதந்தியை பரப்பி இருப்பதாகவும் இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்றும் ஆராத்யா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் அவர்கள் யூடியூப் சேனல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ‘சாமானியரின் குழந்தையோ அல்லது நட்சத்திரங்களின் குழந்தையோ ஒவ்வொரு குழந்தையையும் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் அதை பெற அவர்களுக்கு தகுதி உண்டு என்றும் ஒரு குழந்தையின் உடல் நலம், மனநலம் பற்றி தவறான தகவல்களை பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் மீது விஷமத்தை பரப்புவது தவறானது என்று கூறிய நீதிபதி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

More News

அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? காஜல் அகர்வால் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு ஒரு வயது பூர்த்தியானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் வாழ்த்துக்களை

பாசத்துடன் அனுஷ்கா ஷெட்டி கொடுத்த முத்தம்.. இவ்வளவு பாசமா?

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியின் தந்தை பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் பாசத்துடன் தனது தந்தைக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

அருவியில் ஹாயாக குளியல் போட்ட தமிழ் நடிகை.. வீடியோ வைரல்..!

தமிழ் நடிகை ஒருவர் அருவியில் ஹாயாக குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

நடிகர் மதன்பாப் மகள் ஒரு பிரபல பாடகியா? விஜய் படத்தில் கூட பாடியிருக்காரா?

 காமெடி நடிகர் மதன்பாப் மகள் ஒரு பாடகி என்றும் அவர் விஜய் நடித்த படத்தில் கூட பாடல் பாடியிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அப்பாவை என்னமாய் மாற்றிவிட்டார் கன்னிகா ரவி.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை கன்னிகா ரவி தனது அப்பாவை இளமையாக மாற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.