'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கும் வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்,  இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மிகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது செட்டிற்குள் நுழைந்தவுடனே தனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க தனது மகள் ஆராத்யா அவ்வப்போது உடன் வருவார் என்றும் அப்போது மணிரத்னம் தனது மகளுக்கு ’ஆக்சன்’ என்று கூறும் வாய்ப்பை கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது மகள் தன்னிடம் கூறியபோது எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு ’ஆக்சன்’ என்று கூறியது ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா என்ற தகவல் ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

வேற லெவல் கிளாமர் போஸ் கொடுத்த பாடகி ஜொனிதா காந்தி.. வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் கிராமர் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

ஐஸ்வர்யா ராயுடன் செல்பி.. வர்ணித்து கவிதை எழுதிய 'பொன்னியின் செல்வன்' நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

'இந்தியன் 2' படத்திற்காக கார் பரிசளித்த கமல்.. யாருக்கு கொடுத்தார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'சூர்யா 42' படக்குழுவினர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பெரும் பரபரப்பு!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

'தலைவர் 170' படத்திற்கு ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் 'தலைவர் 170' திரைப்படத்திற்காக அதைவிட அதிகமாக சம்பளத்தை லைகா நிறுவனம்