'நந்தினி' கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்: வேற லெவலில் வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபலை இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்
ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர், ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி போஸ்டர் மற்றும் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தி போஸ்டர் ஆகியவை வெளியாகி வைரல் ஆனது
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான நந்தினி கேரக்டரின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இந்த கேரக்டர் அவருக்கு மிகப் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஏற்படும் கற்பனையை அப்படியே மணிரத்னம் திரையில் கொண்டு வருவார் என்று இந்த போஸ்டர்களில் மூலம் தெரிய வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Vengeance has a beautiful face! Meet Nandini, the Queen of Pazhuvoor! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada. ??@madrastalkies_ #ManiRatnam @arrahman pic.twitter.com/HUD6c2DHiv
— Lyca Productions (@LycaProductions) July 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments