close
Choose your channels

பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யாராய்? பரபரப்பு தகவல் 

Wednesday, August 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் சரத்குமாருக்கு வேறு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கதையின்படி பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும். அப்படியானால் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற தகவல் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் ஐஸ்வர்யாராய், மந்தாகினி என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார் என்பதும் மந்தாகினி சுந்தரசோழர் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அரசு அனுமதி கிடைத்தவுடன் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment