கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா படக்குழு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிக சினிமா வாய்ப்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா தான். இவர் தற்போது மகத் நடிக்கும் ஒரு படத்திலும் ஆரி நடிக்கும் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இன்னும் ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அனாதைகள் இல்லத்தில் இருந்து குழந்தைகள் வரவழைக்கப்பட்டு அவர்களை படப்பிடிப்பை காண அனுமதித்ததோடு, அவர்களுக்கு பரிசுப்பொருட்களும், உணவும் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த படக்குழுவினர் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததோடு, ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஆரி, ஐஸ்வர்யா காதலர்களாக நடித்து வருகின்றனர். இதுவொரு கவிதை நயம் கொண்ட காதல் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை S.S.ராஜமித்ரன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. A.G.மகேஷ் இசையில், தில்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் தயாராகி வருகிறது
. @Aariactor @Aishwaryadutta6 and entire team of their new untitled film celebrated #ChristmasDay in a meaningful way of inviting unprivileged children from orphanage home to shooting spot n surprised them with gifts as #santaclaus delicious food and more celebrations. pic.twitter.com/tyf0xnMUHa
— Johnson PRO (@johnsoncinepro) December 25, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments