ஐஸ்வர்யா மேனனின் வொர்க்-அவுட் வீடியோ: குவியும் லைக்ஸ்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஒர்க்அவுட் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்தே இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
தமிழில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன்பின்னர் ’ஆப்பிள் பெண்ணே’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’வீரா’ ’தமிழ் படம் 2’ ’நான் சிரித்தால்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். ’லாக்டவுன் நேரத்தில் சேர்ந்த கலோரிகளுக்கு பை பை’ என்று அவர் அதில் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com